செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

எந்தை தந்தை ..

எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
வோணத்திரு விழாவில்
அந்தியம் போதில் அரியுருவாகி
அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்
தாண் டென்று பாடுதுமே.

People, who know the meaning of this - please write.

7 கருத்துகள்:

  1. வாமன, மகாபலிக் கதை என்று தெரிகிறது. ஓணம் பண்டிகையைக் குறிக்கிறது என்றும் புலனாகிறது. முழுசா அர்த்தம் சொல்லணுமா என்ன...

    பதிலளிநீக்கு
  2. நம்பி சார்,

    அரியுருவாகின்னா சிம்ம அவதாரம். நரசிம்ம அவதாரம் ஹிரண்யனை அல்லவா அழித்தது. அரின்னா ஹிரன்யன்னு ஒரு அர்த்தம் இருக்கா? ம்ம் ஹூம் நீங்க முழுசா பொழிப்புரையே சொல்லிடுங்க..

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  3. என் அப்பா, அவருடைய அப்பா, அவருக்கு அப்பா என்று ஏழு தலைமுறைகளாக திருவோணத் திருவிழாவில் அந்தியில் மனிதன் சிங்கம் இரு உருவும் கொண்டு தோன்றிய எம் அப்பன் மகா விஷ்ணுவுக்கு தொண்டு செய்கிறோம். பகலும் இரவும் இல்லா சாந்தி வேளையில் சிங்க உருக்கொண்டு இரணியனை அழித்த இறைவனுக்கு பல்லாண்டு பாடி நம் பந்தங்களை தீர்த்துக் கொள்வோம் என்பதே இதன் பொருள்.

    பதிலளிநீக்கு
  4. கௌதம கோத்திரத்தில் உதித்த,
    சுப்ரமணிய
    சேஷாசல
    சுப்ரமணிய
    கோபால
    கௌதமன்

    ஆஹா எனக்கு 4 தலைமுறை
    பெயர்கள் தானே தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  5. விஷாலைத் துணைக்கு அழையுங்கள்
    வி - பா - கெள - கோ - சு - சே - சு என்று ஏழு தலை முறை சொல்லி இந்த ஓணத்தை சிறப்பாக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. கோத்திரம் மாறாமல் இருக்க வேண்டும் என்றால்,
    'ஆ'வைத்தான் அழைத்துக் கொள்ள வேண்டும்!

    பதிலளிநீக்கு
  7. ஆ-வி குழப்பத்துக்கு வருந்துகிறோம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!