வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

நல்லவனா, கெட்டவனா?

வான் வெளியில் அற்புதங்கள் அளவிலடங்காதவை. லட்சக் கணக்கான நட்சத்திரக் கூட்டங்கள். சூரியன் கூட ஒரு நட்சத்திரம்தான். நம் பூமியின் அளவில் ஆயிரக் கணக்கான அளவில் உள் வாங்கிக் கொள்ளக் கூடிய அளவுக்கு சூரியன் பெரிய நட்சத்திரம். இந்த அகண்ட அண்டத்தில் நம் பால்வீதி போலவே கணக்கிலடங்கா பால்வீதிகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். சொல்ல வரும் விஷயம் அது அல்ல. சூரியன் சுற்றி வர ஒரு வருடம், சந்திரன் சுற்றி வர ஒரு மாதமும் ஆகிறது. சரி சனி சுற்றி வர ஆகும் காலம் என்ன தெரியுமா? முப்பது வருடங்கள்.
அவர் அவ்வளவு மெதுவாக சுற்றி வர காரணம் என்ன? அவருக்கு ஒரு கால் கிடையாதாம். ஏன்? அது ஒரு சுவாரஸ்யமான கதை.
நவக்ரகங்களை வென்ற இராவணன் தன மகன் இந்த்ரஜித் பிறக்கும் சமயம் அவன் யாராலும் வெல்லப் படக் கூடாது என்றும் தோல்வியே ஏற்படக் கூடாது என்றும், இன்னும் சரியாக சொல்வதானால் மரணத்தை வெல்ல வேண்டும் என்று எல்லா கிரகங்களையும் பிடித்து பதினோராம் வீட்டில் அடைத்து விட்டானாம்!
செய்வதறியாமல் திகைத்த தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த்ரஜித் பிறக்கும் சமயத்தில் சனி தன் இடது காலை நைசாக நாசத்தைக் கொடுக்கக் கூடிய பன்னிரண்டாம் வீட்டில் வைத்து விட்டானாம். பின்னர் ஜாதகம் கணித்த இராவணன் அதை அறிந்து சனியின் இடது காலை எடுக்க உத்தரவிட்டானாம்.
அதனால்தான் அவர் நொண்டி நொண்டி சுற்றி வர முப்பது வருடங்கள் ஆகின்றதாம்.
மெதுவாக சனியை வரும் படி செய்த இராவணன் நல்லவனா, கெட்டவனா?

3 கருத்துகள்:

  1. ராவணன் காலத்துக்கு முன்னே - சனி சுற்றிவர எடுத்துக் கொண்ட வருடங்கள் எவ்வளவு?
    சூரியன் சுற்றுவதா ? - அல்லது பூமி சூரியனைச் சுற்ற - ஒரு வருடமா?
    நானும் அந்த தமிழ் ஓவியம் ஜோதிட ரத்தினம் சந்திரசேகரன் புத்தகத்தைப் படிக்கும் பொழுது, இந்த மாதிரி எல்லாம் குழம்பினேன்!

    பதிலளிநீக்கு
  2. ஆக மொத்தம் தலை சுற்றுகிறது....

    பதிலளிநீக்கு
  3. //"நல்லவனா, கெட்டவனா//

    தெரியலயே

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!