செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

சுகாதார விளக்கம்

நண்பர் கேஜீக்கு,
உங்கள் கருத்து (comment) படித்தேன். நன்றி.
சிறு வயதில் முத்து என்ற சலவை தொழிலாளி துணிகளை வெளுத்து மடிப்புடன் கொண்டு வருவார். மொட மொடப்புடன், இஸ்திரி வாசனையுடன் அதை போட்டுக்கோள்ள என் பாட்டி விடமாட்டார். காரணம்அவை வெள்ளாவியில் யார் யார் வீட்டுத் துணிகளுடன் துவைக்கப்பட்டதோ, அதனால் அவை விழுப்பு என்று சொல்லி, கொம்பால் எடுத்து, தண்ணீர் கங்காளத்துள் முக்கி பிழிந்து உலர்த்தி விடுவார். மறுபடியும் இஸ்திரியாவது ஒண்ணாவது.அப்படியே சுருக்கங்களுடன் மாட்டிக்கொள்ளவேண்டியதுதான். ஹேர்கட்டிங் போனாலும் எல்லா ட்ரஸ்சையும் அவிழ்த்துப் போட்டுக் குளித்த பின்னேதான் வீட்டுக்குள் நுழைய முடியும். சுகாதாரமற்றவை விழுப்பு என்ற பெயரில் தவிர்க்கப்பட்டது. நாகரீகம் என்ற பெயரில் நாம் எதையும் தவிர்ப்பதில்லை. நோயும் நம்மை தவிர்ப்பதில்லை!
rangan

4 கருத்துகள்:

  1. தவிர்ப்பதில்லை என்பதால் தவிக்கிறோம்... சரிதானே ரங்கன் ஜி...

    பதிலளிநீக்கு
  2. வெகு காலத்துக்கு முன் நம் முன்னோர் பிராகிருதம் என்றறியப்பட்ட சமஸ்கிருத அடிப்படையிலான மொழியில் பேசியும் எழுதியும் இருந்து - இப்பொழுது நாம் அடிக்கடி கேட்கிறோமே " தானிக்கி தீனிகி சரிகா போயந்தி " என்பது மாதிரி - மொழி வழக்குகள் வெறும் வாய் மொழியாகவே வெகு காலம் இருந்து உச்சாடன மந்திரங்கள் ஆகிவிட்டன என்று படுகிறது.
    விழுப்பு மடி என்பன கூட 'அவிழ்ப்பு / விழிப்பு' மேலும் துவைத்து 'மடித்து' வைக்கப் பட்ட துணிகளின் ஆகு பெயராக இருக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு
  3. // விழுப்பு மடி என்பன கூட 'அவிழ்ப்பு / விழிப்பு' மேலும் துவைத்து 'மடித்து' வைக்கப் பட்ட துணிகளின் ஆகு பெயராக இருக்கக் கூடும். //

    Thought provoking comment. Very good.

    பதிலளிநீக்கு
  4. இப்பொழுதெல்லாம் வீட்டில் தண்ணீரே இல்லை என்றோ, அப்படியே தண்ணீர் கிணற்றில் இருந்தாலும் அதன் தரம், நிறம், மணம் துணிகளைத் துவைக்க லாயக்கற்றது என்பதனாலோ அல்லது இரண்டும் இருந்து வீட்டில் இருவருமே வேலைக்கு செல்வதால் நேரமின்மை காரணமாகவோ துணிகள் லாண்டரிக்குப் போகின்றன. பாட்டியின் post-laundery- treatment இப்பொழுதெல்லாம் சாத்தியமேயில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!