சனி, 15 ஆகஸ்ட், 2009

நாடி பிடித்துப் பார்த்த போது.


உலகத்தில் எந்த மூலையிலிருந்து எந்த அனாமதேய மனிதரும் நாடி ஜோசியம் பார்க்கப் போகலாம்.  அவரது நாடி பெரும்பாலும் கிடைக்கிறது.

இது எப்படி சாத்தியம்? உலக ஜனத் தொகை முன்னூறு கோடி என்கிறார்கள். இவ்வளவு பேருக்கும் நாடி எழுதப் பட்டு அது ஒரு சிறு வீட்டினுள் சேமிக்கப் பட்டிருக்க முடியுமா?

உங்கள் நாடி இங்கே இல்லை மூன்றாம் வீட்டில் போய்ப் பாருங்கள் என்று சொல்லப் படுவதாகவும் தெரிகிறது.  ஆனாலும் அவ்வளவு பேருக்கும் எழுதி வைக்கப் பட்டிருந்தால் அகஸ்தியர் இது தவிர வேறு ஏதும் செய்திருக்கவே முடியாது என்று அல்லவா தோன்றுகிறது? அகஸ்தியர் வேறு என்ன செய்தார் என்று குறுக்குக் கேள்வி கேட்கவேண்டாம்.  அவர் சிவன் கல்யாணம் பார்க்க கைலாசம் போனதும், காவிரியை கமண்டலத்தில் கொண்டுவந்ததும் நாம் அறிந்ததே.

மாஜிக் வித்தை போல இதுவும் ஒரு கண்கட்டு வித்தை தான் போலும்.


yraman

4 கருத்துகள்:

  1. முன்னூறு கோடி என்பது நாடி ஜோஸ்யத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமா? சீனாவும் இந்தியாவும் மட்டுமே அவ்வளவு இருக்கும் போலிருக்கிறதே?

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் ஜோஸ்யரை நாடி போய் பார்த்து வருவது தான் நாடி ஜோஸ்யம் வைத்தியர் மாதிரி ரத்த ஓட்டம் சம்பந்தப்பட்டது அல்ல

    பதிலளிநீக்கு
  3. The world population is 600 crore ++

    பதிலளிநீக்கு
  4. அகஸ்தியர் தென்னிந்தியாவில் சுற்றிக் கொண்டிருந்ததனால் அவருக்கு அந்தக் காலத்திலேயே
    நேரடி ஒளிபரப்பில் சிவபெருமான் கல்யாணத் திருக்கோலம் பார்க்கக் கிடைத்தது என்பர். நீங்கள்
    சொல்வது வேறு விதமாக இருக்கிறதே? காக்கை கமண்டலத்தைக் கவிழ்த்ததனால் தான் காவிரியே
    தோன்றியது என்பது கூட ....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!