சனி, 19 செப்டம்பர், 2009

நேரம் மிச்சப்படுத்துதல்!


இன்று சன் டி வி இல - சுகி சிவம் இரண்டாவது முறையாக - நேரம் வீணாக்காமை பற்றிப் பேசினார். முக்கியமாக - பொது நிகழ்ச்சிகளில் ஒரு கும்பல் குத்துவிளக்கேற்றி - கூட்டத்தில் உள்ளவர்களது நேரத்தை வீணடித்தல் - மற்றும் பள்ளிக்கூடம் போன்ற ஸ்தாபனங்களில் கூட நிறைய பேச்சாளர்களை அழைத்து - அவர்கள் ஒவ்வொருவரும் - பேசிப் பேசி - அறுவடை செய்வது - மேலும் வரவேற்புரை - அறிமுக உரை - இணைப்புரை - என்று ஆளுக்காள் - அவரவர் செய்யும் உரைகள் (நேர விரயம்) எல்லாம் விளக்கிக் கூறினார். இணைப்புரை கூறுபவர் - பேச்சாளர் பேசிய பேச்சுக்கு மறுப்புரை கூறிய அபத்தம் - ஆகியவை குறித்தும் அவர் கூறினார்!
எங்கள் blog படிக்கும் வாசகர்கள் - அவர்கள் பின்பற்றும் - நேரம் மிச்சப் படுத்தும் யுக்திகள் குறித்து engalblog@gmail.com என்ற ஈ மெயில் விலாசத்திற்கு எழுதினால் - எல்லோருக்கும் பயன்படும் விதமாக - அதை ஒரு கட்டுரையாக வெளியிடுவோம்.

3 கருத்துகள்:

  1. சுகி சிவம் சொல்வதைப் பார்த்தால் அவர் பேச்சுக்கு எதிராக யாரோ எதோ சொல்லி அவரை சங்கடப் படுத்தி இருப்பார்களோ என்று தோன்றுகிறது. ஆனால் அவர் சொல்லும் ஒன்று சரிதான். திரு குப்பு அவர்களே திரு சுப்பு அவர்களே என்பதே அதிகப் படி என்று இருக்கும் பொது என் உயிரினும் மேலான எனக்கு இடுக்கண் வரும் போது ஓடி வந்து களையும், சாம்பாருக்கு உப்பு போன்ற சுப்பு அவர்களே என்று அழைக்க ஆரம்பித்தால் ஓய்வதற்கு பத்து நிமிடம் ஆகும். அதன் பின் தலைவரை சிலாகித்து ஐந்து நிமிடம், அங்கு இல்லாத தமது கட்சி தலைவருக்கு புகழாரம் ஐந்து நிமிடம் என்று இவங்க சப்ஜெக்ட்டுக்கு வருவதற்கு அரை மணி ஆகிவிடுகிறது.

    விஜய் டிவி இல ஒரு சுவாமிஜி வந்து உட்கார்ந்து கொண்டு எல்லாருக்கும் தெரிந்த உலக்கை உபசாரக் கதையை இருபது நிமிடம் சொன்னது கொடுமையிலும் கொடுமை.

    தண்ணீர், பணம், நேரம் அனைத்திலும் சிக்கனம் வேண்டியது இன்றைய மிக அவசரமான தேவை. மாறாக சினிமா கதாநாயகிகளின் ஆடையில் மட்டுமே காணப் படும் சிக்கனம் கண்ணை உறுத்துகிறது. கருத்தைக் கவரவில்லை.

    என் சிக்கன நடவடிக்கைகள் பற்றி தனியே எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நேரம் பழகுதல் ஒரு வழி.

    முதல் நாள் விஷ்ணு ஸஹஸரநாமம் அல்லது ஒரு முப்பது நிமிடம் ஓடக்கூடிய ஏதாவது பாட்டு தொகுப்பு ஒன்று உங்கள் ஆடியோ வில் ஓட விடுங்கள். உங்கள் காலை கடன்களை ஒவ்வொன்றை முடிக்கும் போதும் பாட்டு அல்லது ஸ்லோகம் எங்கே இருக்கிறது என்று நோட் செய்து கொள்ளுங்கள். ஒரு நான்கைந்து நாட்களுக்கு இப்படியே செய்த பின், பாட்டு முடிவதற்குள் மேலும் சில சில்லறை வேலைகளைத் தேர்ந்தெடுத்து [ வாசலில் இருந்து பேப்பர், பால் இவற்றைக் கொண்டு வருவது, பம்ப் ஓட விடுவது அல்லது நிறுத்துவது போன்றவை] அவற்றையும் உங்கள் அரை மணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. Naan oru murai "Time management" patri lecture edukka ponen...Pogum vazhiyil saalaiyil konjam thavaru seydhen.."Bemani..vootla sollittu vandhiyaa - Unakku "time" sarillannu ninaikiren enru thittinan oru lorry driver"...piragu vazhi pillayarai paarthu ..konjam arudhal peralam enraal...ada unga lecture "time" seri illaye ? sariyana raahukaalathil vaithu irukireer?..irundhalum parigaram irukku enrar archagar..
    idhellam padikka time irukkum namakku sukisivam solvadhil yen udanpaadu illai ??

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!