செவ்வாய், 29 நவம்பர், 2011

தேர்தலுக்குப் பின் வளர்ச்சி


வாக்களித்து நாளாகி விட்டதே...வளர்ச்சி எப்படி என்று பார்க்கலாம் என்று ஐடியா. எதிர்க் கட்சித் தலைவர் பதில் சொல்ல ஆறு மாதம் டைம் கேட்டார். ஆனால் நம்மால் உடனே சொல்லி விட முடிக்கிறது. 

நிச்சயம் இத்தனை நாளில் வளர்ச்சி தெரிகிறது. பழயன முற்றிலும் போய் விட்ட நிலையில் குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு உள்ள வளர்ச்சியை நிரூபணமாகவே காட்டலாம்.

அன்று இருந்த நிலைமைக்கு இன்றுள்ள நிலை கொஞ்சம் வளர்ச்சியைக் காண்பிக்கிறதுதான் என்றாலும் அன்றிருந்த நிலை இன்னும் கூட இருக்கிறது என்பதையும் நிரூபணத்தில் காட்டலாம்.  

பழைய நிலை தொடர்வதையும் புதிய வளர்ச்சி இருப்பதையும் நீங்களே பாருங்களேன்.



|

|
|

|


|





வளர்ச்சி கோடிட்டுக் காண்பிக்கப் பட்டுள்ளது. 
                       

10 கருத்துகள்:

  1. ரொம்ப நல்ல வளர்ச்சி. அதுவும் ஐம்பது சதவிகிதம் என்பது மகிழ்ச்சியான விஷயமல்லவா:)?

    பதிலளிநீக்கு
  2. அந்த மை இத்தனை நாளா அழியாமலா இருந்துச்சு?

    பதிலளிநீக்கு
  3. தேர்த்லுக்குப் பிறகு வெட்டப்பட வேண்டியவைதான் வளர்ந்திருக்கின்றன என்கிறீர்களா?!!!

    பதிலளிநீக்கு
  4. நல்ல சிந்தனை..
    யாருக்கும் அவ்வளவாக தோன்றாத புதிய சிந்தனை..
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப மெதுவா வளருது போல! போஷாக்கு குறைவோ?

    பதிலளிநீக்கு
  6. தேர்தல் எப்பன்னு சொன்னாத்தானே நகவளர்ச்சியின் அளவைச் சரியாகக் கணக்குப் போட இயலும் !

    பதிலளிநீக்கு
  7. ஏதோ சீரியல் பதிவு போல இருக்குனு நானும் சீரியசா படிக்க ஆரம்பிச்சு...ஹ்ம்ம்... சூப்பர் பல்ப்...:)

    பதிலளிநீக்கு
  8. ஆஹா, என் விரல் நகத்தின் நுனிக்கு வந்து விட்டதே!! எங்கள் தொகுதி பக்கம் நல்ல வளர்ச்சியோ?!! :-))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!