திங்கள், 16 டிசம்பர், 2013

இவரைத் தெரியுமா... - டாக்டர் ஹரி சங்கர்.


சிலர் தங்கள் வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் பொதுச்சேவை செய்வார்கள். சிலர் எப்போதுமே சேவை மட்டுமே செய்வார்கள். டாக்டர் ஹரி சங்கர். பாஸிட்டிவ் செய்திகளில் இடம்பெற வேண்டிய மனிதர். 
           
இவர் தனது வேலையையே பொதுச் சேவையாகச் செய்கிறார்.  முதியோர் நல மருத்துவர். சமீபத்தில் எங்கள் வீட்டு சீனியர் சிட்டிசனைப் பார்க்க வந்தபோது அறிமுகம். இன்று (11-12-13) பொதிகைத் தொலைக் காட்சியில் அவரது பேட்டி என்று பார்த்ததும் காத்திருந்து பார்க்க வைத்தது. 
  

இவர் தனது எம் பி பி எஸ் படிப்பின் மூன்றாவது வருடப் படிப்பின்போது தனது பாட்டிக்கு மார்பகப் புற்றுநோய் வந்தபோது வயதான அவரை வெளியிடங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில், பல மருத்துவர்களிடமும் வேண்டியும் வராத நிலையில் PG செய்துகொண்டிருந்த ஒரு சீனியர் மாணவர் (அறுவை சிகிச்சை படிப்பு) உதவியதைச் சொன்னார். 
    
படிப்பு முடிந்ததும் நோயாளிகளைப் பார்க்கும் நேரம் போக மற்ற நேரம் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, நகர முடியாத நோயாளிகளை வீட்டிலேயே சென்று பார்த்தால் என்ன என்று தோன்றியபோது, அப்படி இருப்பவர்கள் யார் என்று யோசித்து, அறுபது வயது முதல் 100 வயது வரை (அல்லது அதற்கும் மேல்) இருக்கும் முதியவர்களை அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வைத்தியம் பார்ப்பது என்று ஆரம்பித்தாராம். இதற்கான சிறப்புப் படிப்பும் படித்துள்ளார் (Gaediatrics). 
     

இவர் குரு திரு வி எஸ் நடராஜன் என்றார். அந்த திரு வி எஸ் நடராஜன் "60 வயதுக்குப் பிறகு..."  என்ற நூலை எழுதியவர். டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் மருத்துவச் சேவைக்காக பெருமை வாய்ந்த டாக்டர் பி.சி. ராய் தேசிய விருதைப் பெற்றவர். 1978-ல் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் முதியோர் நலப் பிரிவைத் தொடங்கியவர், முதியோர் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர், முதியோருக்கு அவர்களுடைய வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியவர் என, முதியோர் மருத்துவம் தொடர்பான பல முதல் முயற்சிகளை மேற்கொண்ட சாதனையாளர். 
     
second childhood என்று சொல்லப்படும் வயதானவர்களுக்கு வரும் வியாதிகள் எளிதில் கண்டறிய முடியாதவையாக, வேறு ஏதோ என்று நினைத்து உறவினர்கள் பயப்படும் வண்ணம் இருக்கும் என்றார். வீட்டில் சென்று பார்த்து எளிய முறையில் அவர்களோடு கலந்து பேசி மருத்துவம் பார்க்கும்போது அவர்களும் புரிந்து கொள்கிறார்கள் என்றார்.
    
கையில் 15 கிலோ எடையுள்ள தோள்பையுடன்தான் செல்கிறார். அதில் அவசர மருத்துவ உதவிக்கான அனைத்து சாதனங்களையும் வைத்திருக்கிறார். தனியாக ஒரு நோட்புக் வைத்திருக்கிறார். அதில் அவர் பார்க்கும் நோயாளிகள் புகைப்படத்துடன் கூடிய விவரங்களை எழுதி வைத்திருக்கிறார். மருத்துவ விவரங்கள்-என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற விவரங்கள் அடங்கிய - கையேடு ஒன்றினையும் தான் சென்று வரும் வீட்டில் கொடுத்து விட்டு வருவாராம்.
    

முதியவர்கள் என்று மட்டுமில்லை, நகர முடியாத நிலையில் இருக்கும் சிறுவயது நோயாளிகளையும் வீட்டில் சென்று பார்ப்பதாகச் சொன்னார். இவரது சட்டையில் உள்ள பேட்ஜ் இவரது துறைச் சிறப்பைச் சொல்கிறது.
473 நோயாளிகள் அவர் லிஸ்ட்டில் (இதுவரை) இருப்பதாகச் சொல்லும் அவர் திருமணமாகாதவர் என்று பேட்டியிலிருந்து தெரிந்தது. அவர் தனது வீட்டுக்கே விசிட் செய்யும் டாக்டர் போலத்தான் வருவதாகவும், தந்தை, தாய் சகோதரி ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இதைச் செய்ய முடியாது என்றும் சொல்கிறார். 



எங்களுக்குத் தெரிந்த அளவில் அவர் நங்கநல்லூரில் வசிக்கிறார். அவரது அலைபேசி எண் : 9688620597



முதியோர் மருத்துவம் மற்றும் ஆசியாவிலேயே முதல் முதலாக சென்னையில்தான் முதியோர் மருத்துவம் என்ற சிறப்புப் பிரிவு தொடங்கப் பட்டது என்ற விவரத்துடன் பயிற்சிப்பட்டறை பற்றிய விவரங்கள் 
                   

15 கருத்துகள்:

  1. பயனுள்ள சேவை செய்யும் மருத்துவருக்கு வாழ்த்துகள்..1

    பதிலளிநீக்கு
  2. குரு திரு வி எஸ் நடராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. Dr.V.S.Natarajan was the one who started the GERIATRICS DEPARTMENT at the G.H.Chennai. We had the opportunity to listen to his lectures as we invited him to our college to address the retiring executives. He used to narrate the likelihood of conditions and morbid ailments or diseases that the elders are prone to but emphasized and exhorted all elderly to spend a few every day in the SERVICE OF THOSE who need them. He reiterated that every person who spent his time for the SERVICE OF OTHERS lived much much more than those who only looked after them.

    Dr.V.S.Natarajan now serves poor at the Melamaruvathur Temple premises during week ends.

    subbu thatha.
    www.subbuthatha.blogspot.com
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. டாக்டர் ஹரிசங்கருக்கு நன்றிகள் பலபல. வீட்டில் வயதானவர்கலுக்கு முடியாத போது அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது அனுபவப்புர்வமாக நான் உணர்கிறேன். பெரிய உள்ளம் கொண்ட டாகடர் வாழ்க நீடுழி.
    அவர் அலைபேசி கொடுத்து உதவியதற்கு உங்களுக்கும் நன்றிகள்பல ஸ்ரீராம் சார்.

    பதிலளிநீக்கு
  5. எத்தனை பெரிய தன்னலமற்ற‌ உன்னதமான சேவை இது! ஒரு நல்ல மருத்துவர் எப்படி இருக்க வேன்டுமென்பதற்கு முன்னுதாரனமாகத் திகழ்கிறார். அவருடைய சேவைக்கு தலை வணங்குகிறேன்.டாக்டர் வி.எஸ்.நடராஜன் பற்றி முன்பேயே கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் சீடரைப்பற்றிய தகவல்களை இங்கே பதிவாக அளித்து முதியோர் பலரும் பயன்படுமாறு செய்த உங்களுக்கும் இனிய பாராட்டுக்கள்!! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  6. டாக்டர் ஹரிசங்கரின் மகத்தான சேவை பாராட்டுக்குரியது. நன்றி ... வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  7. டாக்டர் ஹரி சங்கர். பாஸிட்டிவ் செய்திகளில் இடம்பெற வேண்டிய மனிதர். //
    உண்மைதான்.
    குருவுக்கு ஏற்ற சிஷ்யர்.
    அவரின் சேவைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. டாக்டர் ஹரி சங்கர். பாஸிட்டிவ் செய்திகளில் இடம்பெற வேண்டிய மனிதர். //
    உண்மைதான்.
    குருவுக்கு ஏற்ற சிஷ்யர்.
    அவரின் சேவைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. டாக்டர் ஹரிசங்கரைக் குறித்து இப்போது தான் அறிகிறேன். ஆனால் திரு நடராஜன் குறித்து நிறையக் கேள்விப் பட்டிருக்கேன். இவர்களைப் போன்ற மனிதர்களாலேயே மழை இன்னும் பெய்கிறது எனலாம். அருமையான அறிமுகத்துக்கு வாழ்த்துகள். தொண்டு சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  10. பாராட்ட வார்த்தைகள் இல்லை. மகத்தான சேவை. கடவுளுக்கு ஒப்பானவர் என்றாலும் மிகையில்லை.

    பதிலளிநீக்கு
  11. ஒரு அருமையான மனிதரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள், ஸ்ரீராம். நன்றி!

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்புகளும் பயனுள்ளவை. தினமணியில் இரண்டு இணைப்புகளையும் படித்தேன்.
    ஸ்பெஷல் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. RR மேடம்,
    DD,
    சுப்பு தாத்தா,
    rajalakshmiparamasivam
    மனோ சாமிநாதன்,
    சத்யா நம்மாழ்வார்,
    வல்லிம்மா
    கோமதி அரசு மேடம்
    கீதா சாம்பசிவம்,
    ராமலக்ஷ்மி,
    ரஞ்சனி நாராயணன்,

    பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தன்னலமற்ற இவரது சேவை தொடரட்டும்.....

    பகிர்ந்த உஙக்ளுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!