சனி, 21 டிசம்பர், 2013

பாஸிட்டிவ் செய்திகள் - சென்ற வாரத்தில்.




1) அறுவைச் சிகிச்சை கருவிகள் விற்பனை செய்து வந்த இவர் தற்போது அந்தத் தொழிலையே விட்டு விட்டு, முழுநேரமும் சமூக சேவைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ராமநாதபுரத்தில் தன்னார்வத்துடன் ரத்ததானம் வழங்கும் இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் சமூக சேவையின் மகத்துவத்தை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் மதுரை கோரிப்பாளையத்தில் கியூர் அறக்கட்டளையை நடத்தி வரும் வி.பி.இளையபாரி. உடல் தானம், உடல் உறுப்பு தானம், கண் தானம், ரத்த தானம் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்தல், மதுப் பழக்கத்திலிருந்து மனிதர்களை விடுவித்தல், சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு அதிகச் செலவில்லாமல் இயற்கை மருத்துவம் மூலம் பலரையும் காப்பாற்றுதல் என இவரது சேவைப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது...

2) வேலூரின் வெய்யிலை தனக்கு சாதமாக்கிக் கொண்டு குளிர்பானம் தயாரித்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் லாவண்யா பாலாஜி.       மனமிருந்தால்....


3) துணிச்சல் வான்மதி.

                                                
4) விளம்பரம் விரும்பாமல் உதவி செய்த இவர் ஒரு பாஸிட்டிவ் மனிதர் என்பதில் என்ன சந்தேகம்?

5) ஆண்களே கேள்வி கேட்கத் தயங்கும் இடத்தில் நடு ரோடில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்து கொண்டிருந்த கேரளா அரசியல் வாதிகளுடன் வாதம் செய்த திருவனந்தபுரம் சந்தியா.


6) படிக்கும் காலத்தில் ஃபுட்போர்டில் தொங்காமல், சினிமா, ஊர் சுற்றல் என்றில்லாமல் சுய தொழில் பழகும் மாணவர்கள், குறிப்பாக ஜனகவிஷ்ணு 


7)  கடமைக்குச் செய்யாமல், ஈடுபாட்டுடன் தனது வேலையைச் செய்பவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.


மும்பைப் போலீஸ் சுஜாதா பற்றி கல்கியில் படித்தது.

கனமான போக்குவரத்து நெரிசலில், ஓரம் கட்டிய ஒரு காரை, காரணம் அறிய நெருங்கிய போக்குவரத்துப் போலீஸ்காரர், அதி
ல் ஸ்டியரிங் வீல் மேலே கவிழ்ந்துகிடந்த ஓட்டுனரின் வியர்வையையும், தவிப்பையும் கண்டு அருகில் 'பீட்'டில் நின்றுகொண்டிருந்த சுஜாதாவுக்குத் தகவல் சொல்ல, விரைந்து வந்த சுஜாதா, அவர் மார்வலியால் பாதிக்கப்பட்டிருப்பது புரிந்து, விரைந்து செயலாற்றி, அருகிலிருக்கும் ஆஸ்பத்திரிக்குத் தகவல் சொல்லி, தயார் நிலையில் இருக்கச் செய்து, மேலும் அடுத்தடுத்து இருக்கும் போக்குவரத்து சிக்னல்களுக்கு 'வாக்கி டாக்கி' மூலம் 'கொஞ்ச நேரத்துக்கு சிவப்பு சிக்னல் வேண்டாம்' என்று கட்டளை பிறப்பித்து விட்டு, தானே அருகிலிருந்த ஒரு காரில் அவரை ஏற்றி, காரை ஒட்டிக்கொண்டு, அருகிலிருந்து தகவல் சொன்ன போலீஸ்காரரை பாதிக்கப்பட்ட நபரின் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே வரச் செய்து, மருத்துவமனையில் சேர்த்து, காப்பாற்றியிருக்கிறார்.
காப்பாற்றப்பட்ட அந்த நபர் கிரிக்கெட் வீரர் (தற்போது ஒரு தொழிலதிபர்) 'வினோத் காம்ப்ளி' என்று பின்னர் தெரிந்தது.

14 கருத்துகள்:

  1. பாஸிடிவ் செய்திகள் மனித நேயம், தன்னம்பிக்கை, துணிச்சல், படிக்கும் போதும் தொழில் செய்யலாம், கடமை, எல்லாவற்றையும் அழகாய் கூறுகிறது.
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள். நல்லதை தேடி தருவதற்கு.

    பதிலளிநீக்கு
  2. கண்ணில் பட்ட நல்ல செய்திகளை
    எங்கள் நெஞ்சில் ஏற்றியமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  3. பாஸிட்டிவ் செய்தியில்
    பகிர்ந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  5. எப்போதும்போல இப்போதும் அருமை.

    பதிலளிநீக்கு
  6. அருமையான செய்திகள்...
    பகிர்வுக்கு நன்றி அண்ணா....

    பதிலளிநீக்கு
  7. அருமையான செய்திகள். கடைசிச் செய்தி குறித்து ஏற்கெனவே படிச்சேன். மனிதாபிமானம் இன்னமும் மறையவில்லை என்பதாலே மழை பெய்கிறது. :))))

    பதிலளிநீக்கு
  8. கோமதி அரசு மேடம், ராஜராஜேஸ்வரி மேடம், ரமணி ஸார், திண்டுக்கல் தனபாலன், கவியாழி கண்ணதாசன், சே.குமார்,
    கீதா சாம்பசிவம் மேடம், பழனி.கந்தசாமி ஸார், ஆதி வெங்கட்...

    பின்னூட்டங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் படித்த நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுவது தொடரட்டும்.....

    நல்ல மனம் வாழ்க!

    பதிலளிநீக்கு
  10. /கடமைக்குச் செய்யாமல், ஈடுபாட்டுடன் தனது வேலையைச் செய்பவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்./

    ஆம். அத்தனை பேரும் பாராட்டுக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html?showComment=1390432773517#c4634842557672517303

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!