திங்கள், 30 டிசம்பர், 2013

அலுவலக அனுபவங்கள் - டிரான்ஸ்ஃபர் மேட்டர்!


தலைமை அலுவலகம்.

இடமாறுதல்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்த நேரம். சில டிபார்ட்மெண்ட்களில் 'கொடுக்கவேண்டியதை'க் கொடுத்தால் கிடைக்கும். 

ஒருவர் வெளியூரிலிருந்து வேறு இடத்துக்கு மாறுதல் கேட்டிருந்தார். 

அப்ளிகேஷன் அனுப்பிய கையோடு நேரிலும் சொல்லிப் போக வந்திருந்தார். 

இயக்குனரைப் பார்க்கச் சென்றார். இயக்குனர் "என்ன காரணத்துக்காக இப்போது மாறுதல் கேட்கிறீர்கள்?"

"அதைச் சொல்ல முடியாது ஸார்..."

இயக்குனர் நிமிர்ந்து பார்த்தார். இல்லை, திமிரான பதில் இல்லை இது!

"சொல்லுங்க ஸார்.. சொன்னால்தானே அதில் நியாயமா இல்லையான்னு பார்க்க முடியும்?" 

"இல்லை ஸார்.. சொல்ல முடியாத காரணம் ஸார்...ஆனா நியாமான காரணம்தான் ஸார்..."

"அட, விளையாடாதீங்க... உங்களுக்குச் சொல்ல காரணமில்லை... அப்படித்தானே..."

"இல்லை ஸார்.. அப்படி இல்லை. காரணமில்லைன்னா கேட்பேனா..."
"அப்ப சொல்லுங்க.."

"சொல்ல முடியாத காரணம் ஸார்..."

'சில்லறை புரளாத இடமாயிருந்தாலும் சில்லறை தாராளமாகப் புழங்கும் இடத்துக்கு மாறுதல் கேட்பார்கள். இந்த இடம் 'அந்த' வகையில் 'நல்ல' இடமாச்சே...'

இயக்குனர் மோவாயைத் தடவினார். 'பெல்'லை அடித்தார். உள்ளே வந்த பியூனிடம் விஸ்வநாதன் ஸாரை வரச் சொல்லு" என்றார். 

விஸ்வநாதன் உள்ளே வந்தார். 

"விஸ்வம்.... இவரைக் கொஞ்சம் கேளுங்க... டிரான்ஸ்ஃபர் கேக்கறார். காரணம் கேட்டா சொல்ல முடியாத காரணம்கறார். நீங்க கேளுங்க... காரணம் தெரியாம எப்படி மாறுதல் கொடுப்பது?"

இரண்டு மூன்று முறை கேட்டும் விஸ்வநாதனுக்கும் அதே பதில்தான் 
வந்தது.  இருவருமே ஆர்வமாயினர். 

"அட அஃபீஷியலாக் கூட வேண்டாம்... என்ன காரணம்னு சொல்லுங்க.. அப்பத்தான் எங்களால ஒரு முடிவுக்கு வர முடியும்.."

"ஸார்... அது வந்து...எப்படிச் சொல்றது.. "

"அட, சொல்லுங்க... 


".............................."

இல்லாட்டிப் போங்க ஸார்.. எங்களால ஒன்னும் பண்ண முடியாது"

"இல்லை ஸார்... வந்து... நீங்க அஃபீஷியல் இல்லைன்னு சொல்லியிருக்கீங்க... தப்பாவும் நினைக்கக் கூடாது... கேட்கவும் கூடாது..."

இவ்வளவு பீடிகை ஆர்வத்தை அதிகப்படுத்தியது. 

"அட! சொல்லுய்யா..."

"அது வந்து... வந்து...(சுற்றிலும் பார்த்துக் கொண்டார்) ஸார்.. கேட்டுடாதீங்க ஸார்.. ............................  குவார்ட்டர்ஸ்ல இருக்கேன்னு உங்களுக்குத் தெரியும். நான் குடியிருக்கற வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலதான் ஸார் ரகுராமன் ஸார் இருக்கார் ... (ரகுராமன் என்பவர் இந்த இயக்குனருக்கு அடுத்தபடி அந்தஸ்து உள்ள இயக்குனர்) அவருடைய மிஸஸ் குறி சொல்றாங்க ஸார்... "

"அதுல உங்களுக்கு என்ன?"

"சங்கடமே அதான ஸார்... அவங்க மேல அம்மன் இறங்கி அருள் வருதுன்னுட்டு குறி சொல்றாங்க... நடு ராத்திரிலதான் குறி சொல்றாங்க..."

"ஓ.. உங்க தூக்கம் கெடுதா அதுல.." - விஸ்வநாதன்.

"சும்மா இருங்க விஸ்வம்...அவர் சொல்லட்டும். நீங்க சொல்லுங்க.." என்றார் இயக்குனர்.

"நடு ராத்திரிலதான் அவங்களுக்கு அருள் வருமாம்... அப்போ குறி சொல்றாங்க... ஏகப்பட்ட கூட்டம்.. என்னைத்தான் ஸார் கூப்பிட்டு டோக்கன் குடுக்கச் சொல்றாங்க... என்னைத்தான் வசூல் பண்ணிக் கொடுக்கச் சொல்றாங்க... வாரத்துல நாலு நாள் ராத்திரி கண்ணு முழிச்சு டோக்கன் கொடுக்கணும்... காசு வசூல் பண்ணனும்...மறுநாள் காலை அவங்க வீட்டுக்குப் போய் வசூல் ஆன ரூபாயை அவங்க கிட்ட கொடுக்கணும். டோக்கன் கணக்கோட 'டேலி' ஆகுதான்னு பார்த்து வாங்கிப்பாங்க... ரொம்பக் கஷ்டமா இருக்கு ஸார்... பலநாளா இப்படியே நடக்குது... வேற யாரையும் கூப்பிடவும் மாட்டேங்கறாங்க... தாங்க முடியல... கேட்டுடாதீங்க ஸார்..."

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"உண்மைதான். இதை என்ன காரணம்னு குறிப்பிட முடியும்?"

"குறி சொல்றது பலிக்குதாமா?" என்று கேட்டார் இயக்குனர்.

'இது என்ன கேள்வி?' என்பது போலப் பார்த்தார் விஸ்வம்.

ஏதோ பலிக்குது போல ஸார்.. இல்லன்னா ஒரு நாளைப் போல இவளவு கூட்டம் வருமா?" 

"சரி, நீங்க போங்க... நாங்க பார்த்துச் செய்யறோம்" என்று அவரை அனுப்பி வைத்தார் விஸ்வம். 

"என்னைய்யா சொல்றே... என்ன செய்யலாம் இவருக்கு?  

"பாவமாத்தான் இருக்கு"

"நடுவுல வந்து டிரான்ஸ்ஃபர் கேட்டு, நாம கொடுத்தா பிரச்னையாகுமா..." 

"வேற யாராவது இதே இடத்துக்குக் கேட்டிருந்தாதான் பிரச்னை. நல்லவேளையாய் இந்த இடத்துக்கு வேற ஒரே ஒரு ஆளைத் தவிர வேற யாரும் கேட்கலை. அவரும் ரொம்ப நாளைக்கு முன்னால கேட்டதுதான். அப்புறம் எதுவும் ப்ரெஸ் செய்யவில்லை. ஏதாவது சொல்லி இவருக்குப் போட்டுடலாம்"

"அவர் பிரச்னை பண்ணுவாரா?"

"மாட்டார்னு நினைக்கறேன். பார்த்துக்கலாம் சார்..."

"ரகு மிஸஸ் கிட்ட குறி கேட்கலாமா" என்றார் ஸீரியசாக! 

"இவரைப் பத்தி அவங்க கிட்டயேவா... போங்க ஸார்..."

"இவரைப் பத்தி இல்லீங்க... நம்ம சொந்தப் பிரச்னையைப் பத்தி கேட்டுப் பார்க்கலாமா?"

சிரித்து விட்டு வெளியே போய் விட்டார் விஸ்வநாதன். 

20 கருத்துகள்:

  1. யாருமே ஆதாயம் இல்லாம இதுவும் செய்ய மாட்டாக.

    இவங்களுக்கு குறி சொல்ற அம்மா மாசத்துக்கு எத்தனை வெட்டறாங்க../

    ஒரு முப்பது தேறுமா மாசத்துக்கு..? கேட்டு பாருங்கள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  2. நன்றாக இருக்கிறது கதைதானா.....காரணம் நல்லதாகவே சொல்லி விட்டார்..அதிசயமாக இருக்கிறது.

    --
    அன்புடன்,
    ரேவதி.நரசிம்ஹன்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்

    சிறப்பாக உள்ளது வாழ்துக்கள்

    இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. இப்படியும் பணம் சம்பாதிக்கிறார்கள்... மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டி...

    பதிலளிநீக்கு
  5. DD... குறி சொல்வதைச் சொல்கிறீர்களா! பழை.....ய கதை!

    சூரி ஸார்... ஆப்பீசர் பொண்டாட்டி கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்?

    வல்லிம்மா... கதை இல்லை! பழைய சம்பவம்!

    நன்றி ரூபன்.

    நன்றி ஸ்பை. வயத்தெரிச்சல் எல்லாம் இல்லை... ரசனைதான்!

    பதிலளிநீக்கு
  6. இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    சொந்தப்பிரச்சினை ,அலுவலகபிரச்சினை எல்லாமே குறிகேட்டுத்தான் தீர்க்கப்படுமோ!!

    பதிலளிநீக்கு
  7. சுவாரஸ்யம்
    விஷயமும் சொல்லிச் சென்றவிதமும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம் சார் எனகென்னவோ அந்த அலுவலக அன்பரே நீங்கள் தானோ என்று டவுட்டாக இருக்கிறது... உங்கள் குரலில் வாசித்துப் பார்த்தேன்.. சுவாரசியம் ... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  9. அட! இப்படியெல்லாம் வேறு அவஸ்தையா!!

    தங்களுக்கும், அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  10. அட...நல்ல லாபகரமான தொழிலால்ல இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. 'எங்கள் Blog' ஆசிரியர் குழுவினருக்கு அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. கடைசியில் அவருக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்ததா, இல்லையா?
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், எங்கள் ப்ளாக் குழுவினருக்கு

    பதிலளிநீக்கு
  13. கடைசியில் கேட்கிறாரே ஒரு கேள்வி. குறி கேட்கப் போனாராமா:)?

    ---

    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும், குடும்பத்தினருக்கும், வாசக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு

  14. நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

    நன்றி ஆறுமுகம் அய்யாசாமி.

    நன்றி ரமணி ஸார்.

    நன்றி சீனு... நான் அவரில்லை! :)))

    நன்றி ஆதி வெங்கட்.

    நன்றி rajalakashmi paramasivam

    நன்றி ஜீவி ஸார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் வாசக நண்பர்கள் அனைவருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    நன்றி ரஞ்சனி நாராயணி மேடம். டிரான்ஸ்ஃபர் கிடைக்காமலிருக்குமா? கிடைத்து ஓய்வும் பெற்று விட்டார் அவர்!

    நன்றி ராமலக்ஷ்மி. உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள். அகநாழிகை வெளியீடான உங்கள் சிறுகதைத் தொகுப்புப் புத்தகம் "அடை மழை" வெற்றி அடைய எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. அட ஸ்வாரசியம்... :)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. அன்புடையீர்.
    தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!