வியாழன், 27 ஏப்ரல், 2017

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

திங்கள், 24 ஏப்ரல், 2017

"திங்க"க்கிழமை : பருப்பு உருண்டைக் குழம்பு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி சமையல்


இதை எழுதும்போதே ருசி என் நாக்கில் உணரமுடியுது. எப்போவாச்சும் செய்யற குழம்பு இது. கொஞ்சம் மெனக்கெட்டால், அப்புறம் அடுத்த வேளைக்கு என்ன செய்யறதுன்னு யோசிக்க வேண்டாம்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

சனி, 22 ஏப்ரல், 2017

சிரிய போட்டோகிராபரின் பெரிய செயல்





1)  ஒவ்வொரு ஊரிலும் இதுபோல நடந்தால் ஊருக்கு நல்லது.






2)  சென்னையில் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் ‘ரே ஆஃப் லைட் பவுண்டேஷன்’ 15  ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது.  டாக்டர் பிரியா ராமச்சந்திரன்.










புதன், 19 ஏப்ரல், 2017

புதன் 170419 :: என்ன? எத்தனை? யார்?


சென்ற வாரக் கேள்வியையும் படத்தையும் பார்த்தவர்கள், உடைந்து இருப்பது X ஊர் பகுதி கை காட்டி என்பதை யூகித்து, அந்த உடைந்த பகுதியை, மிஸ்டர் எக்ஸ் தான் வந்த பாதை நோக்கித் திருப்பிவைத்தால், R செல்லும் வழியைக் கண்டுபிடிப்பார் என்று விவரமாக  சொல்லியிருக்கிறீர்களா? 

சொல்லியிருந்தால் நூறு மார்க். இல்லையேல் 99 மார்க். 

1)

என்ன பாடல்? 

Image result for milk       Image result for tick

Image result for fruit Image result for tick

Image result for p chidambaram   Image result for X


2)

ரொம்ப சிம்பிள் கேள்வி:

'நாற்காலி' க்கு எத்தனை கால்?


3)  
படங்களைப் பார்த்தால் எந்தப் பதிவர் நினைவுக்கு வருகிறார்?



 


    



திங்கள், 17 ஏப்ரல், 2017

"திங்க"க்கிழமை : உருளைக்கிழங்கு கூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



உருளைக்கிழங்கு தேங்கா அரைச்ச கூட்டு எனக்கு எப்போதும் பிடித்தமானது. இது சாத்துமது, வெந்தய, வற்றல் குழம்புகளுக்கு ரொம்ப நல்லா சேரும். சமீபத்துல என் ஹஸ்பண்டும் பையனும் இங்க வந்திருந்தாங்க. அப்போ, இந்தக் கூட்டைப் பண்ணினேன். என் பையன் ரொம்ப நல்லா இருக்குன்னு ஆசை ஆசையாச் சாப்பிட்டான். சாதத்துக்கே தொட்டுக்கொண்டு சாப்பிடறேன் என்றான். சுலபமா செய்துவிடலாம். இப்போ செய்முறையைப் பார்ப்போமா?

உருளைக் கிழங்கை தோலோடையே, சதுரமாக சிறு சிறு துண்டுகளாக திருத்திக்கோங்க.  ஒரு பாத்திரத்தில் காயைப் போட்டு, அதுக்கு கொஞ்சம் மேல் வரை தண்ணீர் இருக்கட்டும். உப்பும் மஞ்சப் பொடியும் சேர்த்துக்கோங்க. இப்போ கொதிக்கவைக்கவேண்டியதுதான்.  உருளைக்கிழங்கு வெந்திருக்கணும், ஆனால் ரொம்பக் குழைந்துவிடக்கூடாது.



இப்போ, 5 ஸ்பூன் தேங்காயும், ½ ஸ்பூன் ஜீரகமும், 1-2 வற்றல் மிளகாயும் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும். (அதிரா  ‘செத்தல் மிளகாய்’ என்று குறிப்பிடுவார். பச்சை மிளகாய் செத்துப்போனாத்தான் வற்றல் மிளகாயா ஆறதுனால அப்படி இலங்கைல சொல்றாங்களா?)



உருளைக்கிழங்கு ஆனபின்பு (வெந்தபின்பு), அதோட இந்த பேஸ்டைச் சேர்த்து கலந்துகொண்டு, அடுப்பில் 1-2 நிமிடத்துக்கு சூடு செய்தால் போதும். ஒருவேளை, கூட்டில் தண்ணீர் ஜாஸ்தியாகிவிட்டால், அடுப்பை அணைப்பதற்கு முன்பு, 1 ஸ்பூன் அரிசிமாவைத் தண்ணீரில் கரைத்துச் சேர்த்துக்கவேண்டியதுதான்.



அடுப்பை அணைத்தபின், கடுகு, உளுத்தம் பருப்பு, 1 ஆர்க் கறிவேப்பிலை திருவமாறினால் போதும். கூட்டு தயார். 



எப்போவும் உருளைக் கிழங்கை ரோஸ்ட், கட் கறியமுது, பொடிமாஸ், மசாலா என்று செய்வதற்குப் பதிலாக இந்தக் கூட்டைச் செய்துபாருங்கள்



நான் உருளைக்கிழங்கு கூட்டு செய்த அன்று, கத்தரிக்காய் தொகையலும் வெள்ளரிப் பச்சிடியும் செய்தேன். என் பையன் வந்தபோது, முள்ளங்கி சாம்பாரும் உருளைக்கிழங்கு கூட்டும் செய்தேன்.

ஜெ. அவர்கள் மறைந்தபோது, அவருக்கு உருளைக்கிழங்கு கூட்டு ரொம்பப் பிடிக்கும், வீட்டில் அடிக்கடி அதைச் செய்யச்சொல்லி சாப்பிடுவார் என்று படித்தேன். அது இதுவாக இருக்குமா? 

பின்குறிப்பு:  உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது, ‘உருளைக்கிழங்கின் வாய்வு’ தன்மையைக் குறைக்கும். எங்க அப்பா, பலாச்சுளை சாப்பிட்டபின், ஒரு சிறு துண்டு பலாக்கொட்டையைச் சாப்பிடுவது நல்லது என்று சொல்லுவார் (பலாக்கொட்டையையோ அல்லது நெல்லிக்காயையோ தண்ணீர் அருகில் இல்லாமல் சாப்பிடவேண்டாம். சமயத்தில் தொண்டையை அடைத்துக்கொள்ளும்)


நீங்களும் செய்துபாருங்கள்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.



[ எங்கள் பாஸ் உருளைக்கிழங்கு முட்டைகோஸ் போட்டு ஒரு கூட்டு சாம்பார் செய்வார்.  எனக்கு மிகவும் பிடிக்கும்.  அது பற்றி எங்கள் பிளாக் திங்கற கிழமையில் எழுதிய ஞாபகம்!  இது உருளைக்கிழங்கு மட்டும் போட்டா?  செய்துடுவோம்! - ஸ்ரீராம் ]

சனி, 15 ஏப்ரல், 2017

வாட்ஸாப்பினால் ஆன பயனென்கொல்...



1)  1982 இல் தீர்க்கமாய் சிந்தித்து, உறுதியாய் ஒரு முடிவினை எடுத்தேன்.    என் வகுப்பறை, ஐ.ஐ.டி யில், நான்கு சுவர்களுக்குள் இல்லை என்பது தெரிந்தது.     என் வகுப்பறை, கிராமங்களில், காடுகளில், வயல் வெளிகளில், ஆற்றங்கரைகளில் இருப்பது புரிந்தது.        என் மாணவர்கள் ஐ.ஐ.டி யில் இல்லை என்பதை அறிந்தேன்.      

புதன், 12 ஏப்ரல், 2017

புதன் 170412


LETTERBOX மொத்தம் ஒன்பது லெட்டர்ஸ் என்று கணக்குப் பண்ணி, முன் மொழிந்த மிடில்கிளாஸ் மாதவிக்கும், வழி(மொழி)ந்த மற்ற எல்லோருக்கும் பாராட்டுகள்.

இந்த வாரக் கேள்வி:  


மிஸ்டர் எக்ஸ், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சமயம்,  அதாகப்பட்டது, கூகிள் மாப், அலைபேசி, தொலைபேசி, இத்யாதிகள் இல்லாத நாட்கள்.    நடை பயணம் சென்றார்.

அவர் X என்னும் ஊரிலிருந்து R என்னும் ஊருக்கு செல்லவேண்டியிருந்தது. திசைகாட்டிகளை நம்பி, பயணம் தொடங்கியிருந்தார்.

அவருடைய ஊரிலிருந்து, சற்றேறக்குறைய பத்து காத தூரம் சென்றால், ஒரு நாற்சந்தி வரும். அந்த நாற்சந்தியின் மத்தியில் ஒரு நால் வழிகாட்டி இருக்கிறது, அதன்படி சென்றால் R ஊரை அடையலாம் என்று சென்றார்.

ஆனால், அங்கு சென்றவுடன் அவர் கண்ட காட்சி, அவரை திகைப்பில் ஆழ்த்தியது.


அந்த வழிகாட்டி சமீபத்திய புயலில், வேரோடு விழுந்து உடைந்து கிடந்தது.
அந்த சுற்றுப்பக்கம் பதினெட்டுப் பட்டி தூரத்திற்கு ஆளரவமே இல்லை.



மிஸ்டர் எக்ஸ், அவர் செல்ல நினைத்த R என்ற ஊருக்குப் போய்ச்சேர உங்களால் உதவ இயலுமா?
                

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: விதி - ரெங்கசுப்ரமணி



     

     இந்த வாரம் சாதாரண கேட்டு வாங்கிப் போடும் கதை!  சீதை அடுத்த வாரம்!  அதே சமயம் சீதை ராமனை மன்னிக்கும் முதல் கதையைப் படித்த எங்கள் ஆசிரியர் திரு ராமன் உடனடியாக ஒரு சின்னஞ்சிறு கதையை அனுப்பி வைத்தார்.  அதை இங்கு கீழே தந்திருக்கிறேன்.

திங்கள், 10 ஏப்ரல், 2017

"திங்க"க்கிழமை :: கேரட் பீட்ரூட் அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


கேரட் அல்வா ஓகே. பீட்ரூட் அல்வா ஓகே. இது என்ன கேரட் பீட்ரூட் அல்வா? சமீபத்தில் என் ஹஸ்பண்ட், பசங்க ஆசைப்பட்டாங்கன்னு கேரட் அல்வா பண்ணினேன் என்று சொன்னாள். 



வியாழன், 6 ஏப்ரல், 2017

புதன், 5 ஏப்ரல், 2017

புதன் 170405 :: கணக்குப் பண்ணுங்க


சென்ற வாரக் கேள்வியில், நான் போட்ட (?) குவார்ட்டர், அமெரிக்கன் குவார்ட்டரை நினைத்துதான். அங்கே எல்லாம் குவார்ட்டர் என்றால் அதுதான் அர்த்தம்! நம்ம ஊர்லதான் குவார்ட்டர் என்று சொன்னாலே, மக்கள் "கைக்கு அடக்கமா, குடிச்சிப் பார்க்க வாட்டமா" இருக்கற பாட்டிலை நினைக்கிறார்கள். 

நெல்லைத் தமிழன், துளசிதரன் தில்லையகத்து, அபயா அருணா ஆகியோர் கொடுத்திருந்த யோசனைகள் பிராக்டிகல். 

அவர்களுக்கு ஆளுக்கு ஒரு குவார்ட்டர் அனுப்பலாம் என்று ஐம்பது ரூபாயை வெளியில் எடுத்தார் நண்பர்.