வியாழன், 23 நவம்பர், 2017

இந்தப் படத்தில் இருப்பது இந்தச் செய்தி சம்பந்தப்பட்டது அல்ல

     வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... !




இப்படித்தான் இருந்தாங்க அப்போல்லாம்....
------------------------------------------------------------------------------

(இந்தப் படத்தில் இருப்பது இந்தச் செய்தி சம்பந்தப்பட்டது அல்ல) 


     'பொது கூட்டங்களும், சுவையான நிகழ்ச்சிகளும்' என்ற நூலிலிருந்து: பொள்ளாச்சியில் ஒரு பொதுக்கூட்டம்; பி.எம்.சுப்பிரமணியம் என்பவர், இந்திய - சோவியத் நட்புறவு பற்றி சொற்பொழிவு ஆற்றி முடித்த பின், 'தோழர் மா.வேலாயுதம் துண்டு ஏந்தி வருவார்; உங்களால் முடிந்த அளவு நிதி உதவி அளிக்க வேண்டுகிறேன்...' என்று கேட்டுக் கொண்டார்.

     வசூல் செய்வதற்கான துண்டிற்காக, மேடையில் இருந்த பிரமுகர்களைப் பார்த்தார் வேலாயுதம். அவர்களில் சுப்பிரமணியத்தைத் தவிர வேறு யார் தோளிலும் துண்டு இல்லை. எனவே, சுப்பிரமணியத்திடம் சென்று, அவர் தோளில் போட்டிருந்த மேல் துண்டைக் கொடுக்கும்படி கேட்டார். 

     பிடிவாதமாக, கொடுக்க மறுத்து விட்டார் சுப்பிரமணியம். வேறு வழியின்றி, அவரது மேல் துண்டை பற்றி இழுத்தார் வேலாயுதம். துண்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, வேலாயுதத்தை தள்ளி விட்டார் சுப்பிரமணியம்.


     விடாக்கண்டனாக இருக்கிறாரே என்ற மனச் சங்கடத்துடன், ஒரு மஞ்சள் பையைத் தேடிப் பிடித்து, தம் வசூல் வேலையைத் துவக்கினார், வேலாயுதம். 

     கூட்டம் முடிந்து, அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தபோது, வேலாயுதத்தை அருகில் அழைத்து, தாம் தோளில் போட்டிருந்த துண்டை விரித்து காட்டினார், சுப்பிரமணியம். அதிலே நிறைய இடங்களில் பொத்தல்களும், கிழிசல்களும் இருந்தன.


     'இதை விரித்தால், என் மானமும் போகும்; வசூலின்போது, இதில் விழும் காசுகளும் கீழே விழுந்துவிடும். அதனால் தான், துண்டைக் கொடுக்கவில்லை...' என்றார் சுப்பிரமணியம்.  வேலாயுதத்தின் கண்கள் பனித்தன.


"இப்படியுமா இருந்திருக்காங்க நம்ம நாட்டுல?"

===============================================================================================================================


ஆரம்பிச்சுட்டான்...  மடக்கி மடக்கி எழுதி உயிரை வாங்க....


இடியட் பாக்ஸ்கள் இலவசம் 
பிக்பாஸ்கள் உபயத்தில் 
வெட்டிப்பொழுது 
வீண்பேச்சுகள் இனி நம்வசம் 



தொப்பி திருப்பிப் போட்ட குடிசைகள் 
டிஷ் ஆன்டெனா!

மிக்சியும் கிரைண்டரும் வரவாச்சு 
அம்மி, கல்லுரல்?   போயே போச்சு!

தண்ணி பட்ட பாடு என்று சொல்லிச் சொல்லியே 
தண்ணிக்கே இப்போ பெரும் பாடாச்சு 



புண்ணியம் கட்டிக்கொண்ட 
கோக் பெப்ஸிக்களுடன் 

​குடிநீரும் புகுந்தது பாட்டில்களில் 

கரைகளில் மணல் மறைந்தது 
ஆறுகளில் நீர் வறண்டது ​

​முதலைகள் நீருக்குள் இல்லை 
நிலத்தில் வாழ்கின்றன இப்போது..
பண முதலைகள் ​


செல்போன் உபயத்தில் 
கிராமமும் நரகமாச்சு 
இணைய இல்லுமினாட்டிகளின் 
இணையற்ற 
இலவச பம்மாத்து வியாபாரங்கள் 
கல்விச்சாலைகளும் 
காசு பார்க்கும் கூடங்களாய் 

நகர மயமாக்கல் 
மொத்தத்தில் 
நரக மயமாச்சு!

"என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது..  ஆனா என்னன்னுதான் தெரில..."

மேலே இருப்பது தில்லையகத்தில் பதிவொன்றுக்கு எழுதிய பின்னூட்டம் என்று நினைவு!  சரிதானே கீதா?


====================================================================================================================================


காதல் என்பது

வருங்கால WIFE நிதி!
மேகம் மட்டுமா கவிகிறது?
---------------------


"ஐயோ...  அடுத்த வரி எனக்குத் தெரியும்...."



***************************************************************************************************************************************************************



ஹிஹிஹி.. சும்மா ரொம்பப் பழைய ஒன்று...!

எனக்கு நாலெழுத்து.

இலையில் முதலாக இருக்கும் நான் இல்லையிலும் இருக்கிறேன்.


சொந்தத்தில் இரண்டாவதாக இருந்தாலும் பந்தத்தில் இருக்கிறேன் பாசத்தில் இல்லை.

திருடனில் முதல்வன் மூன்றாவதானாலும் பொருளில் ஒன்றுமில்லை.

யார் என்று தெரிந்ததா முதல் நான்காவதாக,  நியாயமாக இரண்டாவதாக
!


"புரியுது ஸ்ரீராம் ...  புரியுது...  இதெல்லாம் ஒரு கேள்வியாக்கும்?  எல்லாரும் பதில் சொல்லிடுவாங்க..."



=====================================================================================================================================================================




'

77 கருத்துகள்:

  1. அகிலம் அனுஷ்கா மயம்!..

    ஒரு வரிக் கவிதை..
    ஒரு வரியே கவிதை..

    இன்னிக்குப் பொழுது விடிந்ததே!..

    பதிலளிநீக்கு
  2. //ஒரு வரிக் கவிதை //

    அனுஷ்கா ...

    ஒரு வார்த்தைக் கவிதை!!!!!!!!!!

    நன்றி துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  3. அப்படியும் இருந்திருக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  4. அடடே.... ரிஷபன் ஸார்... உங்கள் வருகை உவகை அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம்..

    துண்டில் விழும் காசும் என் காசு..
    கீழே விழும் காசும் என் காசு!..

    - என்று கவி பாடியிருக்கலாம்.. ஆனால்

    அன்றைய சுப்ரமணியம் போன்றவர்கள் எல்லாம் இன்றைய கால கட்டத்தில் பிழைக்கத் தெரியாதவர்கள்...

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம்..
    உங்களால் நானும் அனுஷ்கா ரசிகனாகி விட்டேன்...

    !?....

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் இரசிக்க வைத்தன ஸ்ரீராம்ஜி
    கீழே இருக்கும் பொம்பளை யாருன்னு தெரியலையே...

    பதிலளிநீக்கு
  8. என் பள்ளிக்காலத்தில் என் தாத்தா அப்போதைய காங்கிரஸ் கூட்டங்களுக்கு (பெருந்தலைவர் காமராஜர் காலத்தில்) அழைத்துச் செல்வார். அப்போது மீட்டிங் நடைபெறும்போது இவ்வாறாக வசூல் செய்வதைப் பார்த்துள்ளேன். வசூல் ஆனவற்றை எண்ணும்போது நானும் அவர்களுடன் கலந்துகொண்ட அனுபவம் உண்டு.

    பதிலளிநீக்கு
  9. அனுஷ்கா அனுஷ்கா. மோகம் எப்போது தீரும்.
    துண்டில் ஓட்டை. மனசெல்லாம் நிறை தேசபக்தி.

    பதிலளிநீக்கு
  10. துரை செல்வராஜு சார்.... முன்னர் உங்களை நினைத்தால் நீங்கள் உங்கள் தளத்தில் போட்டிருந்த ஓவியர் மாருதியின் "பெண் முகம்" ஓவியம் என் மனதில் வரும். சமீப காலமாகத்தான் "பூ நாளும் தலை சுமப்ப" ஞாபகம் வருகிறது. அதை மீண்டும் மாற்றிவிடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. பழையகால (ஏன் இந்தக் காலத்திலும் பலர்) கம்யூனிஸ்டுகள் கொள்கையை மட்டும் அறிந்திருந்தனர். தன் வாழ்வையே பொது நலத்திற்கு அர்ப்பணித்தனர். They are great. இருந்தாலும் அவங்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கலை.

    பதிலளிநீக்கு
  12. ஹை ஸ்ரீராம்...அனுஷ்கா படம் போட்டு இனிய காலையாக்கி....பாருங்க துரை செல்வராஜு சகோவையும் நம்ம அரச த்துல சேர வைச்சுட்டீங்க...

    ஒருநாள் தமன்னா படம் போட்டு நம்ம நெ த வையும் சமாதானப்படுத்திடுங்க....ஹீஹ்ஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம் ஆம் என் மடக்கு கவிதை?? க்கு உங்கள் பின்னூட்டம். இதே.. இங்கு வாசிக்கும் போதே தெரிஞ்சுருச்சே... அங்கும் கூட சொல்லிருந்தேன்..என்னோடத்த விட உங்க கவிதை நல்லாருக்குன்னு....உங்க பிளாகிள போடுங்கன்னு......இப்ப போட்டது மகிழ்ச்சி. மீண்டும் ரசித்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  14. புரண்டு புரண்டு இரவைக் கழித்ததால்
    புலவராகிவிட்டீரோ காலையில் என
    புல்லரித்துப்போனேன்

    அரசியலில் ஆரம்பித்து
    அடவாடியாய்க் கவிதை சொல்லி
    அ-னாவில் முடித்தே
    அடையாளம் காட்டிவிட்டீர்கள்

    ஆயுளெல்லாம் வரும் காதலை எண்ணி
    அலையுதே என் நெஞ்சம்
    அனுஷ்கா…விடம்தான் தஞ்சம் –என

    பச்சையாகவே பகிர்ந்துவிட்ட
    பண்பாளர் நீங்கள்…ஆஹா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை...ஏகாந்தன் சகோ சூப்பர்....
      அப்படியே நீங்களும் அரச வில் சேர்ந்துட்டீங்களோன்னு நினைச்சேன்...ஹூம் கடைசில சொன்ன வரிகள் ஸ்ரீராம்குனு....ஏமாத்திட்டீங்க...ஹா ஹா
      கீதா

      நீக்கு
  15. என் மனைவியின் தந்தை கமியூனிஸ்ட் விசுவாசி....அதனால் என் மனைவியும் அக்கட்சிக்குத்தான்...சப்போர்ட்..நான் அதன் முன் வரை தமிழ்நாட்டில் இருந்ததால் இங்குள்ள அரசியல் பற்றித்தான் தெரியும் ஆனால் ஆர்வம் இல்லை. கலைஞரின் தமிழ் ஈர்த்தது. கேரளா சென்று அப்புறம் திருமணத்தின் பின் கமியூனிஸ்ட் கொள்கை எல்லாம் அறிந்து...நாங்கள் அதற்கு ஒட்டு போடும் அளவு ....தமிழ் நாட்டிலும் கமியூனிஸ்ட் நல்ல நேர்மையான தலைவர்கள் இருந்தாலும் மற்ற திராவிட கட்சிகள் ஓங்கியதால் அவர்கள் மக்களிடம் சரியான செல்வாக்கை பெறவில்லை. கேரளத்தை போல் தமிழ் நாட்டில் அரசியல் விழிப்புணர்வு கொஞ்சம் குறைவு என்பதும் ஒரு காரணமாக இருக்கிறது என்றே தோன்றுகிறது.

    நீங்கள் சொல்லியிருக்கும் சம்பவம் மனதை நெகிழ்த்தியது....

    உங்கள் கவிதை எங்கள் தளத்திலும் கருத்தில் சொல்லியிருந்தீர்களே...நீங்கள் மிக அழகாக கவியும் புனைகின்றீர்கள்....ஸ்ரீராம்...


    பதிலளிநீக்கு
  16. கமியூனிஸ்ட் பற்றிநெத சொன்னதே...என் கருத்தும்....

    கில்லர்ஜி...அது யாரு அந்த பொம்பளை என்று கேட்டதற்கு அரச சார்பில் என் கண்டனம் ஹிஹிஹிஹி...பாருங்க எங்க துசேரா சகோ கூட சேர்ந்துட்டார். துசேரா சகோ நன்றி..ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  17. @ நெல்லைத் தமிழன் said...

    >>> துரை செல்வராஜு சார்.... முன்னர் உங்களை நினைத்தால் நீங்கள் உங்கள் தளத்தில் போட்டிருந்த ஓவியர் மாருதியின் "பெண் முகம்" ஓவியம் என் மனதில் வரும். சமீப காலமாகத்தான் "பூ நாளும் தலை சுமப்ப" ஞாபகம் வருகிறது. அதை மீண்டும் மாற்றிவிடாதீர்கள்..<<<

    மாறாது.. மாறாது..
    மனம் என்றும் மாறாது!..

    ஆனாலும்,
    நமது தளத்தில் நேற்று வெளியாகியுள்ள கனலில் கலந்த கனல் .. -
    எனும் பதிவினை வாசிப்பதற்கு அன்புடன் அழைக்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
  18. ஶ்ரீராம் - ஹிஹிஹி.. சும்மா ரொம்பப் பழைய ஒன்று...- இது அந்தக்கால அனுஷ்காவின் அழகிய படத்துக்காகச் சொல்லியதுதானே..

    பதிலளிநீக்கு
  19. என்ன ஶ்ரீராம் இப்படி செய்து விட்டீர்கள்? அருமையான கவிதையும் போட்டு அழகான அனுஷ்கா படத்தையும் போட்டால் எதை ரசிப்பதாம்?

    பதிலளிநீக்கு
  20. பொத்தல் துண்டு!!!!! படித்து இதயம் வலித்த து

    பதிலளிநீக்கு
  21. அச்சச்சோஒ....அச்சச்சோஓஓஓஒ இதைத்தட்டிக் கேய்க்க இங்கின ஆருமே இல்லையா?:)... அனு வை (செல்லமாச் சொன்னால் ரெண்டெழுத்து):)).. ரசிப்பதோடு செரி:) எண்டதுபோல இருந்துதே அன்று:)...

    ஆனா இன்று பார்த்தா அப்பூடித் தெரியல்லயே... பிற:)ச்சனை..பிற:)ம்மபுரத்தைத் தாண்டிப்போய்க்கொண்டிருக்குதே:)... ஹையோ அனு ட நிலைமை கவலைக்கிடம்.. ஓடியாங்கோ முதலில் அனுவைக் காப்பாத்துவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))...

    ஊசிக் குறிப்பு:
    போகிற போக்கைப் பார்த்தால்... “அந்த மரத்துக்குக்” கீழ கோயில் ஒண்டு வந்தாலும் வந்திடும்போல இருக்கே:).. நேக்க்ய் காண்ட்ஸ்சும் ஓடல்ல.. லெக்ஸும் ஆடல்ல:)

    பதிலளிநீக்கு
  22. ///துரை செல்வராஜூ said...
    ஸ்ரீராம்..
    உங்களால் நானும் அனுஷ்கா ரசிகனாகி விட்டேன்...///

    நான் சொன்னனே... ச்சும்மா இருந்த துரை அண்ணனும் மயங்கிட்டார்ர் பட்டென:). ஹையோ வைரவா இன்னும் ஆரார் எல்லாம் இணையப்போகினமோ..:))

    ///KILLERGEE Devakottai said...

    கீழே இருக்கும் பொம்பளை யாருன்னு தெரியலையே...////

    அஞ்சூஊஊ கீதா எங்கின போயிட்டீங்க:).. ஓடிவாங்கோ கொஞ்சம் விம் போட்டு விளக்கவும் பிளீஸ்ஸ்:)).. ஸ்ரீராம் இப்போ ஷையா இருப்பதால:) இதுக்கெல்லாம் பதில் ஜொள்ளமாட்டார்ர்:))

    பதிலளிநீக்கு
  23. தோழர்கள் பி.எம்.எஸ்ஸையும் வேலாயுதத்தையும் நான் அறிவேன்.

    அந்த நாளைய இஸ்கஸ் பணிகள் மறக்க முடியாதவை.

    அதுசரி, இஸ்கஸ் என்றால் என்ன?..

    பதிலளிநீக்கு
  24. ///தொப்பி திருப்பிப்
    போட்ட குடிசைகள்
    டிஷ் ஆன்டெனா!///

    ///முதலைகள் நீருக்குள் இல்லை
    நிலத்தில் வாழ்கின்றன இப்போது..
    பண முதலைகள் ​///

    ஆஹா அழகிய ஹைக்கூக்கள்... கவித..கவித..கவித... அருவியாக் கொட்டுதே:))..

    ////ஏகாந்தன் Aekaanthan ! said...
    புரண்டு புரண்டு இரவைக் கழித்ததால்
    புலவராகிவிட்டீரோ காலையில் என
    புல்லரித்துப்போனேன்...
    அனுஷ்கா…விடம்தான் தஞ்சம் –என///

    ஹா ஹா ஹா வீடியோக் கமெரா ஒளிச்சு வச்சுப் பார்த்தமாதிரியே ஒரு கவிதை:).. கலக்கிட்டீங்க ஏகாந்தன் அண்ணன்...:)

    இனியும் அனு:) க்கா:) படம் போடுவார் எண்டா நினைக்கிறீங்க?:)).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

    பதிலளிநீக்கு
  25. ///நெல்லைத் தமிழன் said...
    ஶ்ரீராம் - ஹிஹிஹி.. சும்மா ரொம்பப் பழைய ஒன்று...- இது அந்தக்கால அனுஷ்காவின் அழகிய படத்துக்காகச் சொல்லியதுதானே..///

    அதே அதே அதிரபதே:).. அனு..க்கா:) இப்போ குண்டூஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:)

    பதிலளிநீக்கு
  26. கேஜிஜி சார் ACTIVEஆ இந்தத் தளத்தைக் கண்காணிக்காததால், ஸ்ரீராம் 'மேகம் மட்டுமா கவிகிறது' என்றெல்லாம் படம் போட ஆரம்பித்துவிட்டார். ஒருவேளை, படங்களைத் தேர்ந்தெடுத்தது அவரோ?

    பதிலளிநீக்கு
  27. கவிதை நல்லா இருக்கு...

    நான் யார் தெரியுமா?! ///// நீ ’இந்தியா’ன்னு தெரியுமே!

    பதிலளிநீக்கு
  28. அதே அதே அதிரபதே:).. அனு..க்கா:) இப்போ குண்டூஊஊஊஊஊ:)) ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:)//

    ஹலோ இது யாராக்கும்?!! எங்க அனுஷ்காவை இப்படிச் சொன்னது...நெல்லைக்கும் சேர்த்துத்தான் ஹிஹிஹிஹி..

    கவிப்புயல் அது பழசாவே இருந்தாலும் எவ்வளோ அழகு பாருங்கோ!!! ச்ச்ச்ச்சோ ச்ச்ச்ச்ச்வீட்டூஊஊஉ...சரி கவிப்புயல் பழசுனு நெதவின் கமென்டை அதே அதெ என்று சொன்னதுக்காக கண்டித்து அதற்கு பனிஷ்மென்டாக ஒரு கவிதை எழுதிப்போடணும்னு அரச முடிவு எடுத்து உங்களுக்கு தகவல் சொல்லியாச்சு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. / துண்டில் விழும் காசும் என் காசு..
    கீழே விழும் காசும் என் காசு!..​//​

    வாங்க துரை செல்வராஜூ ஸார்... உண்மை. மீறிக் கேட்டால் துண்டு விழும் உடல் பாகங்கள்!

    பதிலளிநீக்கு
  30. துரை செல்வராஜூ ஸார்...

    //உங்களால் நானும் அனுஷ்கா ரசிகனாகி விட்டேன்...//

    ஆஹா... தாராளமாக! வெல்கம் டு தி க்ரூப்!

    பதிலளிநீக்கு
  31. /கீழே இருக்கும் பொம்பளை யாருன்னு தெரியலையே...//

    வாங்க கில்லர்ஜி... பரவாயியிலை... பொம்பளை என்ற அளவில் தெரிந்ததே... அது போதும்!!!

    :))

    பதிலளிநீக்கு
  32. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா... நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வாங்க வல்லிம்மா....

    //அனுஷ்கா அனுஷ்கா. மோகம் எப்போது தீரும்.//

    சும்மா ஜாலிக்குதாம்ம்மா....!

    பதிலளிநீக்கு
  34. வாங்க நெல்லை...( 1 )

    கம்யூனிஸ்ட்கள் மிகவும் எளிமையானவர்கள். படாடோப அரசியலுக்கு ஒத்து வராதவர்கள்.

    பதிலளிநீக்கு
  35. வாங்க கீதா... (1) நீங்க சொல்ற ஐடியா நான் ஏற்கெனவே வைத்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. வாங்க கீதா (2) ஆமாம். நினைவுக்கு வருகிறது. டிராப்டில் சேமித்து வைத்திருந்தேன்!

    பதிலளிநீக்கு
  37. வாங்க ஏகாந்தன் ஸார்..

    தூங்கித்தான் கழித்தேன் இரவை
    ஏங்கிக் கழிக்கவில்லை.

    அரசியல் முதல்
    அகிலத்தில்
    அனைத்துமே
    அடாவடி ஆகும்போது
    அன்பையும்
    அடாவடியாகவே அடையலாம்
    என்றே செய்தேன் தடாலடி.

    தஞ்சமடைய
    அன்பு நெஞ்சம்
    ஒன்று
    அணுக்கத் தோழியாய்
    வீட்டிலிருக்க
    அனுஷ்கா உதவியது
    பொழுது போக்கத்தானே
    தவிர
    தொழுது பின் செல்ல அல்ல!

    :))

    பதிலளிநீக்கு
  38. வாங்க துளஸிஜி..

    கேரளத்தில் கம்யூனிஸ்ட்கள் இன்றி ஆட்சி இல்லை. தமிழகத்தில் காட்சிக்கு மட்டும் உண்டு! கவிதை என்று நினைத்து பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வாங்க கீதா (3)

    //கில்லர்ஜி...அது யாரு அந்த பொம்பளை என்று கேட்டதற்கு அரச சார்பில் என் கண்டனம்//

    கண்டனம் எதற்கு? அவர் கருத்தை அவர் சொல்கிறார். வயதானவர்கள் கருத்துகளுக்கு நாம் மதிப்பு தரவேண்டும்!

    :))))

    பதிலளிநீக்கு
  40. வாங்க கீதா (4) இந்தியா... ஆம்! அதான் அனுஷ்கா சொல்லியிருக்காங்களே... எல்லோரும் ஈஸியாக் கண்டு பிடிச்சுடுவீங்கன்னு!

    பதிலளிநீக்கு
  41. துரை செல்வராஜூ ஸார்..
    //மாறாது.. மாறாது..
    மனம் என்றும் மாறாது!..​//


    இதற்கு ஏன் கவலைப் படுகிறீர்கள்? அவருக்கு பொறாமை!

    பதிலளிநீக்கு
  42. வாங்க நெல்லை

    //சும்மா ரொம்பப் பழைய ஒன்று...- இது அந்தக்கால அனுஷ்காவின் //

    அந்தக் கால அனுஷ்காவா? அநியாயமா இல்ல? ஆனாலும் வயசாயிட்டுது உங்களுக்கு நெல்லை!!

    பதிலளிநீக்கு
  43. வாங்க பானுக்கா...

    //அருமையான கவிதையும் போட்டு அழகான அனுஷ்கா படத்தையும் போட்டால் எதை ரசிப்பதாம்?//

    ஆஹா...ஹா.... ஹா.... நீங்கதான் நம்ம சங்கத்தின் கொ ப செ! ஸூப்பர்... ஸூப்பர்...

    பதிலளிநீக்கு
  44. வாங்க க பு அதிரா...

    //அந்த மரத்துக்குக்” கீழ கோயில் ஒண்டு வந்தாலும் வந்திடும்போல இருக்கே:)//

    சேச்சே... கோவில் மனசுல இருக்கு!

    // ச்சும்மா இருந்த துரை அண்ணனும் மயங்கிட்டார்ர் பட்டென:).//


    அழகுக்கு மயங்காதார் யார் அதிரா? சொல்லுங்கோ....

    பதிலளிநீக்கு
  45. @ஸ்ரீராம் - கமா போடலைனா, அர்த்தமே தலைகீழா மாறுதே. பாருங்க.
    தஞ்சமடைய அன்பு நெஞ்சம் ஒன்று அணுக்கத் தோழியாய் வீட்டிலிருக்க உதவியது அனுஷ்கா.

    பொழுது போக்கத்தானே தவிர தொழுது பின் செல்ல அல்ல! - யாரை? அணுக்கத்தோழியையா? :-)

    பதிலளிநீக்கு
  46. வாங்க ஜீவி ஸார்...

    //அதுசரி, இஸ்கஸ் என்றால் என்ன?..//

    அது சரி.. இஸ்கஸ் என்றால் என்ன?!!

    பதிலளிநீக்கு
  47. வாங்க அதிரா...

    //ஆஹா அழகிய ஹைக்கூக்கள்... கவித..கவித..கவித... //

    நன்றி. நன்றி.. நெசம்மாவே பாராட்டா? கலாய்க்கறீங்களா!

    பதிலளிநீக்கு
  48. வாங்க நெல்லை...

    என்ன, கேஜிஜி கிட்ட பிராது கொடுக்கறீங்க... வருங்கால wife நிதி போடுவது அவ்வளவு குத்தமாய்யா....

    மேகம் மட்டுமா கவிந்தது? ல என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? பொருள் குற்றமா? ஹா... ஹா....

    பதிலளிநீக்கு
  49. வாங்க கீதா...

    //ஹலோ இது யாராக்கும்?!! எங்க அனுஷ்காவை இப்படிச் சொன்னது...//

    அடடே.... ஆச்சர்யக்குறி. இருங்க... நம்ம சங்கத்துல உங்களுக்கு என்ன போஸ்ட் கொடுக்கலாம்னு கொ ப செவைக் கேட்டுச் சொல்றேன்!

    பதிலளிநீக்கு
  50. //கமா போடலைனா, அர்த்தமே தலைகீழா மாறுதே. பாருங்க.//

    போங்க நெல்லை.. நீங்க சுக்குமி ளகுதி பிலி என்று படிக்கிறீர்கள்!!! இன்று தாங்கள் நக்கீரர் ஆகி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  51. நெல்லைத்தமிழன்.. கமா போடாமல் பத்தி பிரித்து விட்டேன்! இது பரவாயில்லையா?

    தூங்கித்தான் கழித்தேன் இரவை
    ஏங்கிக் கழிக்கவில்லை.

    அரசியல் முதல்
    அகிலத்தில்
    அனைத்துமே
    அடாவடி ஆகும்போது
    அன்பையும்
    அடாவடியாகவே அடையலாம்
    என்றே செய்தேன் தடாலடி.

    தஞ்சமடைய
    அன்பு நெஞ்சம்
    ஒன்று
    அணுக்கத் தோழியாய்
    வீட்டிலிருக்க


    அனுஷ்கா உதவியது
    பொழுது போக்கத்தானே
    தவிர
    தொழுது பின் செல்ல அல்ல!​

    பதிலளிநீக்கு
  52. அந்த காலத்தில் இப்படியும் எளிமையான மனிதர்கள் இருந்திருக்கிறார்களே பொத்தல் கிழிசல் ஆடைகளை அணிந்திருந்தாலும் உள்ளத்தில் தூய்மை குணத்தால் அரசர்கள் அதனால்தான் இன்னமும் அவர்களை நினைவுகூருகிறோம் .
    இப்போ ஜீன்ஸை பொத்தல் போட்டாத்தான் fashion :(

    பதிலளிநீக்கு

  53. என்ன :) இங்கே அனுஷ்க்கா மயமா இருக்கு :)
    ஒரு தமன்னா படத்தையும் இணைச்சிருக்கலாம் :) நெல்லை தமிழனுக்காக :)

    கவிதைகள் எல்லாம் சூப்பர் பாருங்க அனுஷ்க்காவே ஆச்சர்யப்பட்டுப்போயிருக்காங்க :)

    பதிலளிநீக்கு
  54. வாங்க ஏஞ்சல்... அந்தக் கால அரசியல்வாதிகள் பெரும்பாலும் எளிமையாகவே இருந்தனர்.

    //இப்போ ஜீன்ஸை பொத்தல் போட்டாத்தான் fashion :(//

    நாகரீகம் திரும்ப வேண்டியதுதான்.. ஆனால் இப்படியா திரும்பணும்! !!

    பதிலளிநீக்கு
  55. /கவிதைகள் எல்லாம் சூப்பர் பாருங்க அனுஷ்க்காவே ஆச்சர்யப்பட்டுப்போயிருக்காங்க :)//

    நன்றி ஏஞ்சலின்.

    //ஒரு தமன்னா படத்தையும் இணைச்சிருக்கலாம் :) நெல்லை தமிழனுக்காக :)//

    அதற்கு தனியாக ஒரு பதிவு ஒதுக்கவிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  56. ஹா ஹா நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் இன்று அனுஷ்காமயம்
    கவிதை அழகு ,முதல் விஷயம் இப்பொழுது தான் அறிந்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
  57. இவ்வளவு நன்றாக எழுதக் கூடியவர் ஏன்பிறரது பதிவுகளை தளத்தில் போடவேண்டும் மனசும் கணினியும் ஒத்துழைத்தால் கொட்டுமே கவிதை வரிகள் பாராட்டுகள் ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  58. அந்ந நாய் என்னையே முறைக்கிற மாதிரி இருக்குது, நான் ஓட்டு போட்டுட்டேன் வரிகள் நன்று

    பதிலளிநீக்கு
  59. ///// வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... !
    /////
    ஹையோ ஹையோ ஹையோ இதை யாருமே இங்கின பார்க்கல்லியோ கர்ர்ர்ர்ர்ர்:), மீ இதைக் கவனிக்காமல் இங்கின வந்து ரீ குடிச்சு கதைச்சுப் பேசிப் போயிட்டனே....:)...
    எங்களுக்கும் சூடு சொரணை வெய்க்கம் மானம் றோஓஓசம் பாசம் ஹையோ ஒரு புளோல வந்திட்டுது:)... எல்லாமே இருக்காக்கும்ம்ம்ம்:)...

    இப்படிக்கு:)
    அனு:)... க்கட்சிக்காரருக்கு எதிர்க்கட்சிக்காரர் சயிங்கம்:)...
    நெல்லைத்தமிழன் அயிண்டூஊஊஉ அல்லோரும்:)

    பதிலளிநீக்கு
  60. ////AngelinNovember 23, 2017 at 2:53 PM

    என்ன :) இங்கே அனுஷ்க்கா மயமா இருக்கு :)
    ஒரு தமன்னா படத்தையும் இணைச்சிருக்கலாம் :) நெல்லை தமிழனுக்காக :)////

    ஹல்லோஓ பிஸ்ஸூஊஊ நீங்க எப்பூடித்தான் ஐஸ்சூஊஊ வச்சாலும் நெ தமிழன் கவிப்புயலுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவார் எனச் ஜொள்ளிட்டார்ர் தெரியுமோ??? ஆமா நீங்க ஆரூஊஊ கட்சி அஞ்சு???:)..

    பதிலளிநீக்கு
  61. ///சரி கவிப்புயல் பழசுனு நெதவின் கமென்டை அதே அதெ என்று சொன்னதுக்காக கண்டித்து அதற்கு பனிஷ்மென்டாக ஒரு கவிதை எழுதிப்போடணும்னு அரச முடிவு எடுத்து உங்களுக்கு தகவல் சொல்லியாச்சு!!

    கீதா//

    நோஓஓஓஓ கீதா அப்பூடி இனியும் நான் கவிதை எழுதோணுமெனில்:) எனக்கு ஒரு பெரீய வெள்ளைப்பேப்பரில் எல்லோரும் சைன் பண்ணித் தரோணும்:)..

    //ஸ்ரீராம். said...
    வாங்க ஜீவி ஸார்...

    //அதுசரி, இஸ்கஸ் என்றால் என்ன?..//

    அது சரி.. இஸ்கஸ் என்றால் என்ன?!!///

    அது.. இஸ்கஸ் தான்:).

    பதிலளிநீக்கு
  62. இஸ்கஸ் அப்புறம் இஸ்கப் ஆச்சு :)
    எங்கியோ கேள்விப்பட்டிருக்கோமேன்னு ஆராய்ச்சி செஞ்சேன் கிடைச்சுது :)

    பதிலளிநீக்கு
  63. வாங்க ஜி எம் பி ஸார்...

    //இவ்வளவு நன்றாக எழுதக் கூடியவர் ஏன்பிறரது பதிவுகளை தளத்தில் போடவேண்டும் //

    எழுத விஷயம் இல்லையென்றா பிறரது படைப்புகளை வாங்கிப் போடுகிறோம்? எங்கள் லோகோவைப் பாருங்கள். வலையுலகில் எங்கள் புதிய பாணி! வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸார்.

    பதிலளிநீக்கு
  64. //அந்ந நாய் என்னையே முறைக்கிற மாதிரி இருக்குது, நான் ஓட்டு போட்டுட்டேன் வரிகள் நன்று//

    நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார். வருகைக்கும், வாக்குக்கும்!

    பதிலளிநீக்கு
  65. வாங்க அதிரா...

    //ஹையோ ஹையோ ஹையோ இதை யாருமே இங்கின பார்க்கல்லியோ //

    இதென்ன அநியாயம்! முதல் வரியையே கவனிக்காம விடுவீர்களா!!!


    //அது சரி.. இஸ்கஸ் என்றால் என்ன?!!///

    அது.. இஸ்கஸ் தான்:).​//

    ஹா... ஹா.... ஹா....!

    //எனக்கு ஒரு பெரீய வெள்ளைப்பேப்பரில் எல்லோரும் சைன் பண்ணித் தரோணும்:)..//

    ஓகே... அந்தப் பெரிய வெள்ளைப் பேப்பரை கப்பலில் அனுப்புங்கோ....

    பதிலளிநீக்கு
  66. // 'இதை விரித்தால், என் மானமும் போகும்; வசூலின்போது, இதில் விழும் காசுகளும் கீழே விழுந்துவிடும். அதனால் தான், துண்டைக் கொடுக்கவில்லை...' என்றார் சுப்பிரமணியம். வேலாயுதத்தின் கண்கள் பனித்தன.//

    நம் கண்களும் தான்.


    //முதலைகள் நீருக்குள் இல்லை
    நிலத்தில் வாழ்கின்றன இப்போது..//

    உண்மை .

    கவிதை நன்றாக வருகிறது.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  67. அனுஷ்காவைப் பார்த்ததும் கவிதை மழை கொட்டுதே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!